தூத்துக்குடி ;தனியார் காற்றாலைகளில் குறிவைத்து கைவரிசை கும்பல் கைது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை ஒன்றிலிருந்து அலுமினிய ராடுகளை வெட்டி சிலர் திருடி செல்வதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதியம்புத்தூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரண நடத்தினர். புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த அழகு பாண்டி (27) ஜெயச்சந்திரன் (34 என்பதும் செவல்குளத்தில் உள்ள தனியார் காற்றாலையில் அலுமினிய ராடுகளை வெட்டி திருடி இரும்புக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் அவர்கள் கொடுத்து தகவலின் படி புதியம்புத்தூரில் இரும்பு கடை வைத்திருக்கும் சரவணன் (55) என்பவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தனியார் காற்றாலைகளில் அழகு பாண்டி, ஜெயச்சந்திரன் ஆகியோர் இரும்பு அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை திருடி இரும்பு கடை வைத்திருக்கும் சரவணனிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.தனியார் காற்றாலைகளில் பொருள்களை திருடிவிட்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த கும்பல் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.....
Tags : தூத்துக்குடி தனியார் காற்றாலைகளில் குறிவைத்து கைவரிசை கும்பல் கைது.



















