பிட்காயின்ஸ் சட்ட விரோதமா இல்லையா மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் உச்சநீதிமன்றம்

கிரிப்டோகரன்சிக்கான நெறிமுறைகள், தடை செய்வதற்கான நிலை இந்தியாவில் தற்போது இல்லாத நிலையில், மத்திய அரசிடம் கோர்ட் நிலைப்பாடு குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
கெயின்பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார்.
இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அஜரான கூடுதல் சொலிசிட்டி ஜெனரல் பாதி, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அப்போது, பிட்காயின்ஸ் சட்ட விரோதமா இல்லையா என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் பிட்காய்ஸ்கள் குறித்த நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.
மேலும், தற்போது கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள், தடை செய்வதற்கான வழிவகை இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
Tags :