தென் மேற்கு பருவ மழை கேரளாவுக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்திலிருந்து கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட விரைவு.
கேரளாவின் சில மாவட்டங்களில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தலா 30 பேர் அடங்கிய 210 பேர் கொண்ட 7 குழுக்கள் படை பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன்* தலைமையில் வீரர்கள் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வாகனங்கள் மூலம் சாலை மார்க்கமாக கேரளாவின்கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்னாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு விரைகின்றனர்.இந்த குழுவில் மீட்பு உபகரணங்கள் ரப்பர் படகு,மரம் வெட்டும் கருவிகள், கயிறுகள் , மருத்துவ முதலுதவி சிகிச்சை சாதனங்கள்,நவீன தொலை தொடர்பு சாதனங்கள் போன்றவைகள் உள்ளன.
இந்த அணியினர் தென்மேற்கு பருவமழை முடியும் வரை கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்கள். மேலும் மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் 24*7சிறப்பு அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது. மேலும்
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பில் நமது பேரிடர் மீட்புப் படை அலுவலர்கள் உள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : தென் மேற்கு பருவ மழை கேரளாவுக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு: