by Staff /
07-07-2023
12:09:47pm
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் எனவும், காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த அரசாணையை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் துவங்கப்பட்டுள்ள உயர்தர சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட பலவற்றிற்கு புதிதாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையான சலுகைகளை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
Tags :
Share via