by Staff /
07-07-2023
12:03:07pm
கோவை சரக டிஐஜியாக பதவி வகித்து வந்த விஜயகுமார் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: 'டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. சமீப நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்ததாக ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார். தற்கொலைக்கு அலுவலக பிரச்சனையோ, பணிச்சுமையோ காரணமில்லை' என்றார்.
Tags :
Share via