by Staff /
07-07-2023
11:56:15am
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிளஸ் 2 மாணவிகளான மூன்று பேரை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, ஜிஷ்ணு ஆகியோர் கைதாகினர். 17 வயதுடைய மாணவிகளை ஆசை வார்த்தை கூறி குற்றவாளிகளின் ஒருவரின் வீட்டிற்கு கூட்டிச் சென்று மயக்கமருந்து கொடுத்து பின்னர் பலாத்காரம் செய்துள்ளனர். ஜுலை 4ஆம் தேதி காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவிகளின் நண்பர்களே இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மாணவிகளின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Tags :
Share via