மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி-பொதுச் செயலாளர் வைகோ

by Admin / 02-04-2026 01:26:49am
 மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி-பொதுச் செயலாளர் வைகோ

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.  மொடக்குறிச்சி, மதுரை தெற்கு மற்றும் கடையநல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் சீர்காழி தனித் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் முன்னர் அறிவித்திருந்த நிலையில் ,தற்போது சீர்காழி தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார் .இதன் மூலம் மதிமுக வின் நான்கு வேட்பாளர்களுமே திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது .வாக்காளர்களிடையே குழப்பத்தை தவிர்க்கவும் கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த தேர்தல் களத்தை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். சீர்காழி தனித் தொகுதியில் ஆர். செந்தில் செல்வன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், மதுரை தெற்கில் பூமிநாதன், கடையநல்லூரில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு தொகுதியும் சேர்த்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 176 பேர் போட்டியிடுகின்றனர்.வைகோவின் இந்த முடிவை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.

 

Tags :

Share via
Logo