கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி. கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்பு
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி. கே. சிவகுமார் இன்று மாலை நாலு பத்து மணிக்கு பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இப்ப பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து சித்தராமையா முதலமைச்சராக பதவி ஏற்றார். அந்நேரத்தில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் இரண்டரை ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக உள்ள டி கே சிவகுமார் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என்கிற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. நீ ஒப்பந்தத்தின்படியே சமீபத்தில் முதல்வராக இருந்த சித்தராமையா பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக டி கே சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் இவரது பெயரை முன்னாள் முதலமைச்சர் சித்ராமய்யா முன்மொழிந்து ஆதரவு நல்கினார்.
Tags :


















