கொலை மற்றும் பாலியல் குற்றங்களை அரசு நிர்வாகத்தில் நிலவும் அன்றாட குறைபாடுகளை சுட்டிக்காட்ட ஆறு மாசம் தேவை இல்லை முதலமைச்சர் விஜய்க்கு ஆ. ராசா

by Admin / 03-06-2026 01:23:16am
கொலை மற்றும் பாலியல் குற்றங்களை அரசு நிர்வாகத்தில் நிலவும் அன்றாட குறைபாடுகளை சுட்டிக்காட்ட ஆறு மாசம் தேவை இல்லை  முதலமைச்சர் விஜய்க்கு ஆ. ராசா

தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது ஆட்சியை ஆறு மாசம் கழித்து விமர்சிப்போம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால்,ஆறு நாளுக்குள்ளே அந்த வேலையை செய்து விட்டார்கள் என்று சொல்லி இருந்தார். அதற்கு திமுக துணைச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  ஆ. ராசா ஆறு மாத கால தமிழக வெற்றிக்கழக ஆட்சியை திமுக விமர்சிக்காது என்று தான் சொன்னதே தவிர மாநிலத்தில் நடைபெறும் கொலை மற்றும் பாலியல் குற்றங்களை அரசு நிர்வாகத்தில் நிலவும் அன்றாட குறைபாடுகளை சுட்டிக்காட்ட ஆறு மாசம் தேவை இல்லை என்றும் தெரிவித்ததோடு முதலமைச்சர் விஜய் அடிக்கடி பயன்படுத்தும் ப்ரோ என்கிற சொல்லையும் இவர் பயன்படுத்தி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை வெறும் அரசாணை மட்டத்தில் இருக்கும் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்திற்கு போய் மத்திய அரசிடம்இவ்வளவு கெஞ்சுகிறீர்களே? உங்களுடைய வீரம் இதுதானா ? என்கிற கேள்வியையும் எழுப்பியதோடு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசியல் அமைப்பையே மீறி நின்று வென்ற கட்சி என்றும் அது ஆட்சி கலைப்பிற்கும் அஞ்சாதது என்றும் தெரிவித்ததோடு நிதி நிலையை சீரமைக்க ஆறு மாசமோ அல்லது இரண்டு வருடங்களோ ஆகலாம் ஆனால் அன்றாட சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை கேள்வி கேட்கக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் காவல்துறை, துப்பாக்கி மற்றும் அதிகாரிகளின் இடமாற்ற அதிகாரம் என அனைத்தும் தன் கையில் இருக்கும் போது மாநிலத்தில் நடக்கும் கொலை மற்றும் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த ஏன் இன்னும் கால அவகாசம் கேட்கிறீர்கள்? என்றும் கூறியதோடு அரசு நிர்வாகத்தில் நிலவும் அன்றாட குறைபாடுகளை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமைஉண்டு என்றும் உளவுத்துறை சரியாக வைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற குற்றங்கள் நிகழாது என்றும் இது முதலமைச்சரின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

Tags :

Share via

More stories

Logo