அக்னிவீர் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 16-10-2023 05:18:48pm
அக்னிவீர் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பாதுகாப்பு பணியில் இருந்த அக்னிவீர் ராணுவ வீரர் அம்ரித்பால் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரரின் இறுதிச் சடங்கிற்கு ராணுவ மரியாதை அளிக்கவில்லை என்று குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த ராணுவ அதிகாரிகள், அம்ரித்பால் சிங் மரணம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுவதாக தெரிவித்தனர். ராணுவ வீரர் அம்ரித்பால் ரஜோரி செக்டாரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories