அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு

by Staff / 03-09-2024 03:40:23pm
அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு

26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படும். மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories