by Admin /
12-07-2023
12:35:45am
காலை 07 மணி முதல் 09 மணி வரை மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்-சரத்குமார்.
மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்-என சமத்துவமக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:
மனித மூளையை சலவை செய்து, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
One attachment • Scanned by Gmail
Tags :
Share via