12 பேரை சிக்க வைத்த மாடல் அழகி கைது
ஹனி ட்ராப்பில் 12 பேரை சிக்க வைத்த மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி நேஹா மெஹர் (27) கைது செய்யப்பட்டார். நேஹா மற்றும் அவரது குழுவினர் பெங்களூருவில் சமூக வலைதளங்கள் மூலம் பழகிய பின், அவர்களை பிளாட்டுக்கு அழைத்து, பணம் உள்ளிட்டவற்றை பறித்து வந்துள்ளனர். நேஹாவின் வலையில் 20 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சிக்கியுள்ளனர். இதில், வரும் நபர்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவோம் என மிரட்டி பல லட்சம் பணத்தை பறித்துள்ளனர். சக குற்றவாளிகள் யாசின், பிரகாஷ், பாலிகாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
Tags :