by Admin /
12-07-2023
01:11:58am
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் பிரபலமான திரையரங்கம் மற்றும் அதனை தொடர்புடைய கடைகள் உள்ளன.சொத்துக்கள் அனைத்தும் இளையாழ்வார் என்பவருக்கு சொந்தமானது. இளையாழ்வர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த நிலையில் அவரது மூத்த மகள் அம்புஜரம் அவரது உறவினர்கள் பெயரில் உள்ளது. திரையரங்கு மேலாளராக ஆத்தூரைச் சேர்ந்த அங்கமுத்து உள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த நரேஷ்குமார்,கீதேசன் ஆகியோரிடம் சொத்து தொடர்பாக பவர் பத்திரம் வாங்கி உள்ளதாகவும், பவர் பத்திரம் தன்னிடம் உள்ளதாகவும் திரையரங்கை தொடர்ந்து நீ நடத்தக் கூடாது என்றும், அனைத்து வாடகை வசூல் செய்து தன்னிடம் தர வேண்டும் எனவும் திரையரங்கு மேலாளர் அங்கமுத்துவை பாஜக பிரமுகர் அருள்பிரகாஷ் (50) என்பவரை மிரட்டியுள்ளார்.இது தொடர்பாக நரேஷ் குமாரின் மனைவி கிருஷ்ணவேணியிடம் அங்கமுத்து கேட்ட போது அவரும் அங்கமுத்துவை மிரட்டியுள்ளார். இது குறித்து அங்கமுத்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அருள் பிரகாஷ் போலீசார் கைது செய்தனர். மேலும் நரேஷ் குமார் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அருள் பிரகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via