by Staff /
13-07-2023
01:15:32pm
கர்நாடகாவின் கோலா பகுதியைச் சேர்ந்த பிரபாகர் குப்தா என்பவரின் குடும்பத்தினருக்கு 40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்கள் அங்கு பயிரிட்ட தக்காளியை டன் கணக்கில் விற்று ரூ.38 லட்சம் சம்பாதித்துள்ளனர். 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ.800 விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில், சந்தை விலை ஏற்றம் காரணமாக இவர்களுக்கு ரூ.1,900 கிடைத்துள்ளது. கிலோ ரூ.126-க்கு விற்றுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக இவர்களது குடும்பம் தக்காளி சாகுபடி செய்து வந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொகை சம்பாதித்தது கிடையாது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Tags :
Share via