பாத யாத்திரையை நிறுத்துங்க... ராகுலுக்கு காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்

by Staff / 17-10-2022 05:19:12pm
பாத யாத்திரையை நிறுத்துங்க... ராகுலுக்கு காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்

ராகுல்காந்தி தமது பாத யாத்திரையை நிறுத்தி வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், கோவா முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தினா வேண்டுகோள் விடுத்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்சி அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும் என்று விரும்புவதாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனா கார்கே போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வகையில் சசிதரூர் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via