ஓநாய்களை கண்டதும் சுட அரசு உத்தரவு
உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் 9 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 02) மேலும் ஒரு சிறுமியை ஓநாய்கள் கடித்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 8 குழந்தைகள் உட்பட 9 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்ட நிலையில், வனத்துறையினர் ஓநாய்களை வலை வீசி தேடி வருகின்றனர். அண்மையில் நடந்த மிகக் கொடூரமான விலங்கு மனித மோதல் சம்பவம் இதுவாகும்.
Tags :