திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேருக்கு சிறை

by Editor / 25-07-2025 04:48:23pm
திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேருக்கு சிறை

திண்டுக்கல் மாவட்டம் ஜோத்தம்பட்டியில் திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று, திமுக பிரமுகரும், மாநகராட்சி ஒப்பந்ததாரருமான முருகன், காருக்குள் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 8 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

 

Tags :

Share via