இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த அமைப்புகள்

by Editor / 21-02-2022 11:44:14pm
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த அமைப்புகள்

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவ வேண்டும் என‌ இலங்கை அரசின் தமிழ் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ள‌னர்.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 10 ஆண்டுகடந்துவிட்டது. இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை அணுகி  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், இலங்கை சமூக உட்கட்டமைப்பு துறையின் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்து பேசியதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கையிலுள்ள மீனவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்த கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை சில மாற்றங்களை கொண்டு வந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்று செந்தில் தொண்டாமான் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது..இந்த சந்திப்பு இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு நல்லுறவை உருவாக்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த அமைப்புகள்
 

Tags : cm meet

Share via