பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000

by Staff / 11-02-2023 12:20:44pm
 பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000

பெண் வாக்காளர்கள், பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா’ என்ற முழக்கத்துடன் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 பத்திரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சி முன்வைக்கிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கல்லூரி மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஸ்கூட்டி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via

More stories

Logo