ஆர்ப்பாட்டம் செய்வோரை வரலாறு மறந்துவிடும் - மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று டெல்லியில் கூடுகிறது. தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும். அமளியில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்வோரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்காது என்று எதிர்க்கட்சிகளுக்கு பாடம் எடுத்தார்.
Tags :