விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் சீமான் அப்பா வேடத்தில்....
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு அப்பா வேடத்தில் நடிக்க உள்ளார்.. இயற்கை விவசாய த்திற்கும் செயற்கை விவசாயத்திற்கும் இடையிலான கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படம். இன்றைக்கு விவசாயிகளினுடைய பிரச்சனைகளை பேசும் படமாக அமையும் என்றும் எல். ஐ. சி என்ற பெயரிடப்பட்ட இப்படத்தினுடைய பெயர் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில்,. எல்.ஐ.சி நிறுவனத்தை குறிப்பிட்டு இந்த படம் பெயர் வைக்கப்படவில்லை என்று விக்னேஷ் சிவன் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாகவும் விரைவில் பட தலைப்பு குறித்த பிரச்சனை தீர்ந்து விட வாய்ப்பு உள்ளதாகவும் திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.தற்பொழுது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு கோவை வெள்ளையங்கிரியில் உள்ளஈஷா மையத்தில் நடந்து வருகிறது. விக்னேஷ் சிவனுக்காக ஈஷா மையம் அனுமதி வழங்கி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Tags :