பொது போக்குவரத்துக்கு அனுமதி தளர்வுகள்

by Editor / 25-06-2021 07:23:04pm
பொது போக்குவரத்துக்கு அனுமதி தளர்வுகள்

 

 

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.அதனடிப்படையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன

 

காலை 6 முதல் மாலை 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மின் சாதனங்கள் விற்பனைக்கு அனுமதி

ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி

கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி

பாத்திர கடைகள், பேன்சி, அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி

ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதி

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி

மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி

சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி

திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி

23 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

 

 

Tags :

Share via