தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 30 ஆம் தேதி வரை நீடிப்பு
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை ஜனவரி 30 ஆம் தேதி வரை நீடித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசம் தற்போது ஜனவரி 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.. 2026 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பெயர் சேர்ப்பு பணிகளுக்கு பின்பு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17, 2026 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் நேற்றோடு நிறைவு பெற்றிருந்தாலும் இணையதளம் வழியாகவும் அல்லது நேரடியாகவும் ஜனவரி 30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :


















