கடலூர் மாவட்டத்தில் கதிருக்குப்பதில்  கருவறுக்கபட்டதாக  விவசாயிகள் கண்ணீர் 

by Editor / 26-07-2023 09:58:59pm
கடலூர் மாவட்டத்தில் கதிருக்குப்பதில்  கருவறுக்கபட்டதாக  விவசாயிகள் கண்ணீர் 

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் NLC நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில், NLC நிறுவனம் கையகப்படுத்தும் இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. கதிர்விளைந்து நிற்கும் நேரத்தில் கதிரை அறுவடை செய்யமுடியாமல் அழிக்கும்  செயல் விவசாயிகளின் கருவை அறுக்கும் செயல் என பெண் விவசாயிகள் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கதிருக்குப்பதில்  கருவறுக்கபட்டதாக  விவசாயிகள் கண்ணீர் 
 
Tags :

Share via