ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பெண்கள் ரயில் மோதி பலி.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பெண்கள் ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி சனிக்கிழமை இரவு கன்ஹாங்காடு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது மூன்று பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.இறந்தவர்கள் தெற்கு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்கவனத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது.ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள சுழலில் 3 பெண்கள் ரயில் மோதி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பெண்கள் ரயில் மோதி பலி