ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - மீண்டும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார் திருமா.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற வீடியோவை விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் அது நீக்கப்பட்டு விட்டாலும் அது குறித்த கருத்தாக்கங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஒரு சில மணி நேரங்களில் இந்த வீடியோ வெளிவந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பல்வேறு ஊடகவியலாளர்கள் இது குறித்து தமது கருத்துக்களை தெரிவித்து வரக்கூடிய நிலையில் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பேசப்படும் கருத்துக்கள் அவர் வேறு கூட்டணிக்கு மாறப் போகிறாரா..? இல்லை ஆட்சிக்கு எதிராக நெருக்கடிகளை கொடுத்து தனக்கானதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கி நகர்கிறாரா...? என்கிற யூகங்கள் வலுத்து வருகின்றன. அவர் இது போன்ற எண்ணத்தை மனதில் வைத்து செயல்படவில்லை என்று சொன்னாலும் வேறு ஏதோ ஒரு காரணம் இல்லாமல் இது போன்ற கருத்து வெளியே வந்திருக்காது என்கிற பேச்சும் நடுநிலையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அடிபடுகிறது. மதுவுக்கு எதிரான அவர் நடத்த கூடிய மாநாட்டில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் அதில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட எந்தக்கட்சிகள் வந்தாலும் எங்களோடு கரம் கோக்கலாம் என்றும் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகம் சார்ந்த விசயம் என்பதால் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும் இது அடுத்த கூட்டணிக்கான நகர்வாகவும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. ஆளும் திமுக அரசுக்கு என்ன விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம் என்பதை விசிக யோசித்து இருக்கலாம். கூட்டணியில் இருந்தாலும் தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்கிற கருத்தும் தமிழகம் முழுவதுமுள்ள விசிக நிர்வாகிகளிடம் மனரீதியில் பாதிப்பாக இருக்கிறது.
அதன் வெளிப்பாடுகளும் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி மறைமலை நகரில் நடந்த நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவின் பேச்சுக்களே இப்போது சமூக வளைத்தளங்களில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - மீண்டும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார் திருமா