விஜய் கட்டிய சாய்பாபா கோவில்.. ஷோபா நெகிழ்ச்சி

by Staff / 11-04-2024 05:35:19pm
விஜய் கட்டிய சாய்பாபா கோவில்.. ஷோபா நெகிழ்ச்சி

நடிகர் விஜய் GOAT படத்தில் நடித்துவரும் நிலையில் படப்பிடிப்புக்காக புதுச்சேரி, கேரளா, தாய்லாந்து என அடுத்தடுத்து பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அதன்பின்னர், அந்த கோவில் தனது தாய் ஷோபாவுக்காக அவர் கட்டிய கோவில் என்று தெரியவந்தது. இதுகுறித்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ரொம்ப நாளா விஜய் கிட்ட கேட்டேன் உடனே சாய்பாபா கோவில் கட்டி குடுத்துட்டாரு என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via