டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது... பெண்கள் போராட்டம்

மது கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையில், திருப்பூரில் மதுபானக்கடை வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மெயின்ரோடு பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடை 30 ஆண்டுகளாக அங்கு இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு பிரச்னை இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடை அருகிலேயே இருப்பதால், தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் குடித்துவிட்டு பத்திரமாக வீடு திரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
Tags :