இயக்குனர் மாரிமுத்து இறுதி ஊர்வலம் 

by Editor / 09-09-2023 01:54:34pm
இயக்குனர் மாரிமுத்து இறுதி ஊர்வலம் 

சென்னையில் நேற்று மாரடைப்பு காரணமாக காலமான இயக்குனரும் ,நடிகருமான மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம் தற்போது அவரதசொந்த ஊரான தேனிமாவட்டம்  பசுமலை கிராமத்திலுள்ள இல்லத்தில் இருந்து அமரர் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று வருகின்றனர்.இந்த இறுதி ஊர்வலத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து இவருடைய ரசிகர்கள் வருகை புரிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இந்த ஊர்வலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயான கரைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.அங்கு மாரி முத்தின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

 

Tags : இயக்குனரும் ,நடிகருமான மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம்

Share via