காரச்சேவு செய்வது எப்படி .

.காரச்சேவு
தேவை
கடலை மாவு – 2 கிலோ
டால்டா – 200 கிராம்
நல்லெண்ணெய் – 500 கிராம்
மிளகு பொடி – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
அரிசிமாவு – 100 கிராம்
சோடா உப்பு – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 10 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
வெள்ளபூடு பொடி – சிறிதளவு
செய்முறை
கடலை மாவு அரிசிமாவுடன், மிளகாய்தூள், பெருங்காயம், பூடு மிளகுத்தூள் சேர்த்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயில் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும். மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். (முறுக்கு குழலில் பிழிந்து தயார் செய்ததும் உதிரியாக்கி கொள்ளலாம்.)
Tags :