வழக்கறிஞர் வீட்டில் 19பவுன் நகை, 20லட்சம் பணத்தை திருடிய இருவர் கைது- நகை பணம் பறிமுதல்

மதுரை சிங்கராயர் காலனி பகுதியைச் சேர்ந்த லல்லி என்ற பெண் வழக்கறிஞர் வீட்டில் கடந்த 21 ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போன வழக்கில் வீட்டில் வேலை பார்க்க வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் நரிமேடு சிங்கராயர் காலனி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து மற்றும் செல்லூரை சேர்ந்த பிரவீன் ஆகிய இருவரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் ரொக்க பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tags : வழக்கறிஞர் வீட்டில் 19பவுன் நகை, 20லட்சம் பணத்தை திருடிய இருவர் கைது- நகை பணம் பறிமுதல்