டெல்லியில் மண் பானைகளை ஏந்தி காங்கிரஸ் போராட்டம்

by Staff / 15-06-2024 03:25:10pm
டெல்லியில் மண் பானைகளை ஏந்தி காங்கிரஸ் போராட்டம்

தலைநகர் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாநகரம் முழுவதும் மண் பானைகளை தலையில் வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது. தலையில் மண் பானைகளை ஏந்தியவாறும், கைகளில் காங்கிரஸ் கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

Tags :

Share via