சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி.

by Editor / 21-10-2021 07:18:03pm
சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக   பழனிசாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பின் போது எதிர்ப்பினை தெரிவித்ததோடு அவர் குறித்த பல்வேறு தகவல்களையும் கூறினார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா குறித்தும், அவரின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து உருவபொம்மையை கைப்பற்றிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, சசிகலாவிற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்த போராட்டத்தால் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories