சிறுவனின் வீலிங் விபரீதம்-தந்தை கைது

by Editor / 25-12-2022 10:12:48pm
சிறுவனின் வீலிங் விபரீதம்-தந்தை கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் உணவகம் அருகே, இளைஞர் ஒருவர் வீலிங் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதை கண்ட போக்குவரத்து காவல்துறை, அப்பகுதியில் உள்ள 70 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மதுரவாயல் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் 17 வயது மாணவரையும், அவரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது தந்தை மெக்கானிக் கோபால் என்பவரையும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், 308- பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், மோட்டார் வாகன சட்டம் பிரிவு 199 (a) - 18 வயது நிரம்பாதவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via