இசை நிகழ்ச்சி குளறுபடி காவல்துறையின் தோல்வியைக் காட்டுகிறது

by Staff / 13-09-2023 01:35:57pm
இசை நிகழ்ச்சி குளறுபடி காவல்துறையின் தோல்வியைக் காட்டுகிறது

சென்னை பனையூர் பகுதியில் ஏ. ஆர். ரஹ்மானுடைய இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த காவல்துறை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி, சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது, திமுக அரசின் காவல்துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உளவுத் துறை கடந்த 28 மாத திமுக ஆட்சியில், முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது. முன்விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, பழிக்குப் பழி தாக்குதலில் ஈடுபடும் ரவுடிகளின் அராஜகங்கள் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில், பொம்மை முதல்வர் ஸ்டாலினும், அவரது மகனும், விளையாட்டுத் துறை மந்திரியுமான உதயநிதியும், மக்களிடம் ஏதேதோ பேசி, அவர்களைக் குழப்பி திசை திருப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories