திமுகவை குறை கூற அதிமுகவுக்கு தகுதி இல்லை: கனிமொழி எம்பி

by Staff / 21-03-2024 02:05:56pm
திமுகவை குறை கூற அதிமுகவுக்கு தகுதி இல்லை: கனிமொழி எம்பி

திமுகவை குறை கூறுவதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை என திமுக எம். பி. கனிமொழி காட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், "மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் (மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா எதிர்த்த மசோதாக்களை) ஆதரித்து அதிமுகவினர் வாக்களித்தனர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிமுக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை" என்றார்

 

Tags :

Share via

More stories