இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.

by Editor / 22-04-2023 11:31:37am
 இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.

தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 44 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நகைகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது

 

Tags :

Share via