“மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்” - ராகவா லாரன்ஸ்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழ்நாட்டில் மக்கள் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் விருப்பத்தையும் தீர்ப்பையும் அனைவரும் மதிக்க வேண்டும். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க முயற்சிப்பவர்கள் மக்களிடமிருந்து மேலும் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :


















