கும்பகோணத்தில் போலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது

by Staff / 25-08-2024 12:49:35pm
கும்பகோணத்தில் போலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது

கும்பகோணம் மேலக்காவேரியில் கே. எம். எஸ். நகரில் ஒரு வீட்டில் பாண்டிச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி விற்பனை செய்வதாக திருச்சி, தஞ்சையை சேர்ந்த மதுவிலக்கு புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் வெள்ளிக்கிழமை இரவு மேலக்காவேரி பகுதிக்கு வந்து ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு கேன்களில் வைக்கப்பட்டிருந்த சாராயத்தை டாஸ்மாக் காலி குவார்ட்டர் பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி, சீல் வைத்து விற்பனை செய்வது, அதற்கான இயந்திரங்கள் இருந்ததையும் கண்டறிந்தனர்.மேலும் அங்கிருந்த சையது இப்ராகிம், அன்பழகன், குறிஞ்சி ஆகிய மூவரையும் கைது செய்து அங்கிருந்த சாராய கேன்கள், பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட போலி மதுபானங்கள், சாராய பாக்கெட்டுகள், சீல் மற்றும் லேபிள்கள், மூடி அடைக்கும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo