போதையில் ஓட்டுநர் செய்த காரியம்.. ஆட்டோவில் இருந்து குதித்த பெண்
கர்நாடகா: பெங்களூரு ஹோரமாவில் இருந்து தனிசந்திரா வரை நேற்று (ஜன.2) இரவு பெண் ஒருவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெண் கூறிய பாதையில் ஆட்டோ செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை ஆட்டோ ஓட்டுநரிடம் அப்பெண் கூறியுள்ளார். இருந்தபோதிலும், அந்த ஆட்டோ நிற்காமல் சென்றுள்ளது. இதனால், பயந்துபோன அப்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில், விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :