குடியரசுத்தலைவரை வரவேற்ற ஆளுநர்,முதல்வர். .

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, யானைகளுக்கு உணவளித்து, பாகன்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம் உரையாடினார். இந்த பயணத்தின் போது, ஆஸ்கர் விருது பெற்ற யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசு தலைவர் சந்தித்து பேசினார். தொடர்ந்து பணியாளர்களுடன் சேர்ந்து குடியரசு தலைவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பரிசுகளை வழங்கினார். சமீபத்தில் தமிழக அரசு சார்பில் பெள்ளிக்கு முதல் பெண் யானை பராமரிப்பாளராக பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.முதல்வர்,ஆளுநர் ஆகியோர் குடியரசுத்தலைவரை பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர்.

Tags :