இந்தியாவின் வலிமையான செய்தியை அவர்கள் உலகத்துக்கு முன்னெடுத்து செல்வார்கள்

by Admin / 18-05-2025 06:27:08pm
இந்தியாவின் வலிமையான செய்தியை அவர்கள் உலகத்துக்கு முன்னெடுத்து செல்வார்கள்

காஷ்மீர் பகல் காமில் நான்கு தீவிரவாதிகள் அப்பாவி 26 சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற கொடூரத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான தாக்குதல் தொடர்ந்தது. இந்நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து நிறுத்தின. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானில் அடைக்கலமாக உள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா மேற்கொண்ட தாக்குதலுக்கான உண்மையான காரணத்தை வெளிநாடுகளுக்கு புலப்படுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு அனைத்து கட்சியினுடைய பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்களை அமைத்துள்ளது. இந்த ஏழு குழுக்களில் அடங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் தலைவர்கள் உள்ளடக்கிய அந்தக் குழு இந்தியாவின் சூழல்களை மற்ற நாட்டினர் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக விளக்கங்களை அளிக்கவும் உள்ள குழுக்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது .அதில், ஆப்ரேஷன் சிந்தூர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் ஏழு அனைத்து கட்சி குழுக்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு செல்லும் என்றும் அனைத்து வகையான பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் உறுதியான அணுகுமுறை பேசிய கருத்து ஒற்றுமை ஆகியவற்றை அனைத்து கட்சி குழுக்கள் விளக்கிச் சொல்லும் என்றும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்வது இல்லை என்ற இந்தியாவின் வலிமையான செய்தியை அவர்கள் உலகத்துக்கு முன்னெடுத்து செல்வார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரஷ்யா ஸ்பெயின், கிரீஸ் பாப்பியா ஸ்லோவேனியா போன்ற நாடுகளுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via