முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் -ஒருவர் கைது

by Editor / 22-09-2022 10:36:06am
 முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் -ஒருவர் கைது

வட சென்னையில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம்- 5 உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர்  காவல்நிலையத்தில் புகார் செய்தனர் . இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் குறித்து காவல்துறை விசாரணை செய்த நிலையில்,  கிருஷ்ணகுமார், முருகன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக  போலீசார் தேடிவந்தனர்.இந் நிலையில் தலைமறைவாகயி ருந்த கிருஷ்ணகுமார், முருகனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories