என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறே

by Admin / 18-05-2025 06:23:19pm
 என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறே

நடிகர்  ரவிமோகன்  தம் மனைவியும் மாமியார் குறித்து விடுத்த அறிக்கையில் ஆர்த்தியோடு வாழ்ந்த 16 ஆண்டுகள் அடிமை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தம் பெற்றோர்களை கூட சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆர்டியும் தம் மாமியார் தம்மை பயன்படுத்தியதாகவும் தற்பொழுது கெனிஷாவுடன் கொண்ட பழக்கம் தன்னை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஆர்த்தியின் தாயாரும் மோகன் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியீட்டு உள்ளார். அதில், கடந்த 25 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக இருக்கிறேன். சமீபகாரமாக என் மீது எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது இவ்வளவு காலமும் என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மௌனமாக இருந்தேன் ஆனால் கொடுமைக்காரி குடும்பத்தை பிரித்தவள் பணத்தை சொத்தை அபகரித்தவள் என்று என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் அந்த பொய் உண்மையாகிவிடும் வீராப்பு என்ற படத்தை தயாரித்த பிறகு சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர் 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி தான் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க முன் வந்தேன் . அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்கமறு திரைப்படம் விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை .இருந்தாலும் ஜெயம் ரவியால் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு அவரை வைத்து நான் எடுத்த மூன்று படங்களுக்காக சுமார் 100 கோடிக்கும் மேலாக கடன் வாங்கி இருக்கிறேன். அந்த பணத்தில் 25 சதவீதத்தை ஜெயம் ரவிக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் ஆதாரங்கள் உள்ளன .என்னுடைய கடனுக்காக நான் என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் .அதில் துளியும் உண்மை இல்லை .அவரை என் மாப்பிள்ளை என்பதை தாண்டி சொந்த மகனாக கருதினேன் .அதனால் பைனான்சியர்கள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். அதற்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.  பட வெளியீட்டின் போது கூட நஷ்டத்தை ஈடுகெட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத் தான் ஜெயம் ரவி கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்போதும் கடனுக்கு பொறுப்பேற்று கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. கடந்த ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை ஜெயம் ரவி தவிர்த்து வந்தார் .அவரை சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்று நினைத்துதான் ஒரு தயாரிப்பாளராக அல்ல.. ஒரு தாயாக, பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் . பணத்திற்காக ஜெயம் ரவி சொன்னது போல் கோடிக்கணக்கான ரூபாய்க்கு அல்ல ..ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை வைத்திருந்தால் கூட அதை வெளிய வரட்டும் .எப்போதும் உங்களை கதாநாயகன் பிம்பத்திலேயேநாங்கள் பார்க்கிறோம் ,ரசிக்கிறோம். நடந்து வரும் பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ,நீங்கள் சொல்லும் பொய்கள் ,உங்களை கரம் தாழ்த்தி விடுகிறது. இன்று வரை பேரப்பிள்ளைகளுக்கான என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாய்க்கு தான் தெரியும் .ஏற்கனவே ,நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமக்காதீர்கள் .அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via