தூங்கிய ஓட்டுநர்.. தீயில் கருகிய கண்டெய்னர் லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென தீ பிடித்த எரிந்துள்ளது. கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி காலி கண்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. இதனை, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சிவம்குமார் இயக்கினார். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தூங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பிய நிலையில் உயிர் தப்பினார்.
Tags :