பாஜக கூட்டணியில் விஜய்..? தவெக திட்டவட்டம்

பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் 1,000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய் உடன் கூட்டணிக்கான முயற்சிகள் நடப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில், புதிய பல்வேறு கட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பாஜக, திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் தவெக, அதிமுக பற்றி நேரடியாக இதுவரை வாய் திறக்கவில்லை. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.
Tags :