கூகுள் பிளேஸ்டோரில் இருந்து தகவல் கசிய வாய்ப்பு
கூகுள் பிளேஸ்டோரில் இருந்து 19,000 ஆப்ஸ்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் இதனால் கோடிக்கணக்கானோரின் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அவஸ்ட் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, பெயர், முகவரி, லொக்கேஷன், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட ஆப்ஸ்கள் சேகரித்த விவரங்கள் கசிய வாய்ப்புண்டு எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக உணவு டெலிவரி ஆப்ஸ்கள், கேமிங் ஆப்ஸ், இமெயில் மற்றும் லைப்ஸ்டைல் ஆப்ஸ்களில் உள்ள தகவல்கள் கசிய அதிக வாய்ப்புள்ளதாகவும் அவஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.நாம் ஒவ்வொருவரும் உடல் பிட்னஸ், அன்றாட நடைமுறைகள், முக்கிய பாஸ்வேர்டுகள், பின் நம்பர்கள், தகவல்களை ஆப்ஸ் மூலமாக செல்போனில் சேமித்துக்கொள்கிறோம். ஆனால் இதற்கு பாதுகாப்பு இல்லை என்பதால் என்ன செய்வது என்ற கேள்வியும் சிக்கலும் எழுந்துள்ளது.
Tags :



















