மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகை
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபிணர் மாணவ மாணவியருக்கு பள்ளி படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 6ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 என்ற அளவிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.250 என்ற அளவிலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய http://escholarship.tn.gov.in/scholarship.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Tags :