மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து நாடகமாடிய கணவன் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா (23) கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வீட்டில் தீயில் கருகி இறந்தார். கணவர் முருகேசன் (30) மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார். ஆனால், ஆஷாவின் தாயார் மாரியம்மாள் அளித்த புகாரில் சந்தேகம் எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், முருகேசன் மனைவியை அடித்துக் கொன்று, பின்னர் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை நாடகமாடியது அம்பலமானது. முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags :



















